இலங்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் 15,000 லீற்றர் போத்தல் தண்ணீரை அன்பளிப்பு செய்துள்ளது.

குறித்த தண்ணீர் போத்தல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது அந்த மாவட்டங்களில் உள்ள பல கிணறுகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் வெள்ள நிலைமையால் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கவனத்தைப் பெறுவதற்கான வேண்டுகோளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை