இலங்கை

இலங்கைக்கு 6900 வாகனங்கள் வாகனங்கள் இறக்குமதி – வெளிவந்த முக்கிய தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவற்றில் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப்கள் என குறிப்பிட்டார்.

ஆம்புலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்