சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு!
சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 06’ இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை மேலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
(Visited 4 times, 1 visits today)