இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது

பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சுக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து, கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்நிலையில், கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த விருது கிரீஸ் நாட்டு மக்கள் இந்தியாவின் மீது வைத்துள்ள மரியாதையின் அடையாளாக இருக்கிறது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி