இந்தியா

விஜயகாந்த் உடல் நிலை தொடர்பில் மகன் வெளியிட்ட தகவல்! கவலையில் தொண்டர்கள்

விஜயகாந்த் உடல்நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருக்கும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், திரைப்பட நடிகராக இருக்கும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவுதான். அவர் பழையபடி பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரையும் போல நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நல்லா இருக்கிறார். இந்த உடல்நிலையிலேயே அவர் 100 வயது வரை நன்றாக இருப்பார்.” என்றார்.

கேப்டனின் மந்திரமே ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன் என்றும் விஜய பிரபாகரன் அப்போது தெரிவித்தார்.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்த அவரது மகன் விஜயபிரபாகரன் அளித்துள்ள பேட்டி, தேமுதிக தொண்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே