சிங்கப்பூரில் திருமணத்தை இணையம் வழி பதிவு செய்ய அனுமதி
சிங்கப்பூரில் மக்களுக்கு இலவான சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மணமக்கள் அவர்களின் திருமணத்தை விரைவில் இணையம் வழியே பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மணமக்கள் அவர்களின் திருமணத்தை விரைவில் இணையம் வழியே பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணப் பதிவகமும்,முஸ்லிம் திருமணப் பதிவகமும் அதற்கென ‘Our Marriage Journey’ எனும் இணையவாசலை மேம்படுத்தியுள்ளன.
அடுத்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து மணமக்கள் இணையம் வழியே திருமணத்தைப் பதிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண விண்ணப்பம் முதல் சான்றிதழ் வழங்குவது வரை அனைத்து நடைமுறைகளும் மின்னிலக்கமயமாகின்றன.
மின்னிலக்கச் சான்றிதழுக்குக் கூடுதலாக, விரும்பினால், சடங்குபூர்வச் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம்.
அதில் அவர்கள் கையெழுத்திடவும் இயலும்.