சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கம்?
சீனவெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி இலங்கை, வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவர் பொதுவெளியில் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்தே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)