ஆசியா ஐரோப்பா

ஈராக்- ஸ்வீடன் தூதரகத்திற்கு தீயிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர். சமீபத்தில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டது, வரும் வாரங்களில் இதுபோன்ற ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிராக ஈராக்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்டின் சக்திவாய்ந்த ஷியா மதகுருவான முக்தாதா சதர் இந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது”.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்