DDOவிற்க எதிராக வாக்களிக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் (DDO) திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை (01.07) நடைபெறவுள்ளது. இதன்போது உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியின் தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)