ஐரோப்பா

கிரீஸ் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து : 9 எகிப்தியர்கள் நிதிமன்றத்தில் ஆஜர்!

கிரீஸ் – மத்தியதரைக் கடலில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 எகிப்தியர்கள் கிரீஸ் நீதிமன்றத்தில் இன்று (20.06) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த ஒன்பது பேர் மீதும்  ஒரு குற்றவியல் அமைப்பில் பங்கேற்பது, ஆணவக் கொலை மற்றும் கப்பல் விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிரீஸின் மேற்கு கடற்கரையில் பாழடைந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 500இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தப்பிப்பிழைத்தவர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில், மனித கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதன்படி பாகிஸ்தானில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த  300 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்