முடங்கியது முகப்புத்தகம் (Facebook) !!
உலகளாவிய ரீதியில் முகப்புத்தகம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பேஸ்புக்கில் ஏற்பட்ட ஒரு பரவலான செயலிழப்பால் அதன் பிரதான தளம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் மெசெஞ்சரையும் பாதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிழப்பின் போது, பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாகவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீண்டும் உள்நுழைய முயன்றபோது, எதிர்பாராத பிழை (unexpected error occurred” ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





