25 வயதில் முடிந்த வாழ்க்கை!
ஆஸ்திரேலியா, மெல்போர்னைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை Jemma Stapleton , தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் தாய்லாந்தில் காலமானார்.
புகழ்பெற்ற Stawell Gift ஓட்டப்பந்தயத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர், தனது குடும்பத்தினருடன் Koh Samui தீவில் சுற்றுலா சென்றிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது.
அவரது மறைவுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
எனினும், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.
ஜெம்மாவின் சகோதரர் மற்றும் வாழ்க்கைத் துணைவர் ஆகியோர் இணையதள வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி அளிப்பதற்காகத் தொடங்கப்பட்ட இணையப் பக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்கள் நிதியுதவியாகத் திரட்டப்பட்டுள்ளன.




