ஐரோப்பா முக்கிய செய்திகள்

வட அயர்லாந்துக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தம்!

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வட அயர்லாந்தின் டிரான்ஸ்லிங்க்  (Translink ) நிறுவனம் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பெல்ஃபாஸ்டிலிருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை,  Ulsterbus   அல்லது கிளைடர் (Glider) சேவைகள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில் நிலையத்தில் (Grand Central Station)  இருந்து இயக்கப்படும்கடைசி ரயில் சேவைகள் இரவு 8.15 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக இயக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை பெல்ஃபாஸ்டுக்கு வெளியே, உள்ளூர்  பேருந்து சேவைகள் சில மாற்றங்களுடன் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் Goldliner   சேவைகள் இரவு 7.30 மணிக்கு மேல் புறப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்