அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பலி!
Palau நாட்டுக் கொடியுடன் பயணித்த Settebello கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் Sarbananda Sonowal இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் பாதையில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறியதாகக் குற்றம் சாட்டி, புதன்கிழமையன்று அந்த எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடக்கத்தில் மூன்று இந்திய மாலுமிகளைக் காணவில்லை என்றும், 21 இந்தியப் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே காணாமல்போனவர்கள் என அறிவிக்கப்பட்ட மூவரும் உயிரிழந்துவிட்டனர் என தெரியவருகின்றது.
ஆதித்யா சர்மா (Deck Cadet), சிவானந்த் சௌராசியா (Engine Fitter), பட்னாலா சுரேஷ் (Chief Engineer) ஆகிய மூவருமே உயிரிழந்தவர்களாவர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்கிற்காக விரைவாக இந்தியா கொண்டு வருவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் Sarbananda Sonowal உத்தரவிட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.




