இந்தியா

ஒரு துளி தண்ணீர் கூட பாகிஸ்தானுக்குள் செல்லாது – இந்தியா உறுதி!

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நதி பகிர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதை தடுக்க இந்தியா செயற்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து  பாகிஸ்தானுடனான  சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது.

இதற்கமைய “ஒரு துளி தண்ணீர் கூட” பாகிஸ்தானுக்குள் செல்லாது என்பதை உறுதிப்படுத்த புது டெல்லி செயல்பட்டு வருவதாக  மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார்.

மோடி இந்த முடிவை எடுத்ததிலிருந்து, ஒரு துளி தண்ணீர் கூட அங்கு செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார், மேலும் நாங்கள் இதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்,” என்று இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே