செய்தி பொழுதுபோக்கு

பாரதிராஜாவின் பூதவுடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இன்று காலை எடுத்துவரப்பட்டது.

பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். எந்த பின்னணியும் இல்லாமல் கிராமத்தில் இருந்து சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர்.

மண்மணம் வீசும் திரைப்படங்களை அதிகம் எடுத்ததுடன் தேனி மாவட்டத்துக்கு அடிக்கடி வந்து பொதுமக்களுடன் இயல்பாக பழகுவார்.

இதனால் சொந்த ஊர் மக்கள் இவர் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தனர்.

பாரதிராஜா சென்னையில் குடியேறி இருந்தாலும் தன் சொந்த மண் மீது தனிப்பாசம் கொண்டிருந்தார்.

இதனால் இறந்த பிறகு தன் உடலை இங்குதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் அடிக்கடிகூறி வந்துள்ளார்.

இதன்படி நேற்று சென்னையில் பலரும் இவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இரவில் இவரது உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வட்டம் காட்ரோடு அருகே உள்ள அவரது பண்ணையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து பிரத்தேயக வாகனத்தில் வந்த இவரது உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜாவின் உடல் இன்று காலை 7 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்களும், பிரமுகர்களும், உள்ளூர் மக்களும் அதிகளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்பு மாலை 3 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி