எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்க இராணுவம் ஓமான் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கும் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இன்று இந்த காணொளிகளை வெளியிட்டுள்ளது.
நேற்று இரவு 11:14 மணிக்கு, ஈரானிலிருந்து எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்குக் கப்பல் குழுவினர் மீண்டும் மீண்டும் இணங்கத் தவறியதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இராணுவத்தினர் விமானத்தில் இருந்து கப்பல் மீது குண்டுகளை வீசும் காட்சிகள் மேற்படி வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இடம்பெற்றுள்ளன.
ஏப்ரல் 13 அன்று ஈரான் மீது முற்றுகையைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இணங்காத கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




