உலகம் செய்தி

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புமீது ஈரான் கடும் அதிருப்தி!

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei , கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீது முன்வைக்கப்படும் எந்தவொரு கண்டனத் தீர்மானத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையும் பிராந்தியத்தின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அணுசக்தி நிலையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்போது நிலவும் மிதமிஞ்சிய சந்தேகங்களுக்கு மத்தியிலும், பாகிஸ்தான் வழியாக மறைமுகமான தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி