ஐரோப்பா

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலில் குறைப்பாடு!! தாமதமாகும் பயணம்!

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான, எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) கப்பலில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

3.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்த விமானம் தாங்கி கப்பல், அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளில் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நோர்வேயின் ஸ்டாவாங்கர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தொழில்நுட்ப கேளாாறை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுதுதியுள்ளனர்.

மேற்படி கோளாறு சீரமைக்கப்பட்டவுடன் வரும் நாட்களில் கப்பல் தனது பயணத்தைத் தொடரும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகளுடன் கூட்டுப் பயிற்சிக்கு சென்றபோது இதுபோன்ற குறைப்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்