உலகம்

அணு ஆயுதக் கடற்படையை உருவாக்கும் கிம் – சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன் ஆய்வு!

அணு ஆயுதக் கடற்படையை உருவாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துவதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் உறுதியளித்துள்ளார்.

திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 5,000 டன் எடை கொண்ட ‘காங் கோன்’ என்ற போர்க்கப்பலை கிம் பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது கருத்து வெளியிட்ட கிம், “நாட்டின் அணு ஆயுதத் தடுப்பில் ஒரு பெரிய பங்கை வகிக்கக்கூடிய மற்றும் ‘நீருக்கு அடியிலோ அல்லது நீரின் மேலேயோ எந்த நேரத்திலும் எதிரிக்கு மரண அடி கொடுக்கக்கூடிய’ கடற்படைகளை ‘விரைவாக உருவாக்க’ வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

05 ஆண்டு பாதுகாப்பு திட்டத்தில் கடற்படைக்குதான் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அடுத்ததாக 10000டன் எடை கொண்ட பெரிய போர்க்கப்பல்களை கட்டுவது குறித்தும் விவரித்துள்ளார்.

இதேவேளை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்தவாரத்தில் வடகொரியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் கிம் தனது கடற்படையை ஆய்வு செய்துள்ளமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்