இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் தகவல்!
இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதித்தது.
எனினும், அமெரிக்கா பதிலுக்கு எதையும் செய்யவில்லை. நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது.
இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் தற்போது அமெரிக்கா அதிக பணம் சம்பாதிக்கின்றது. இந்தியாவுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில் பிரதமர் மோடியை எனக்குப் பிடிக்கும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





