அதிக நன்கொடைகளை ஈர்த்த ரிஃபார்ம் யுகே கட்சி! தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு!
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், ரிஃபார்ம் யுகே கட்சி அரசியல் நன்கொடைகளை ஈர்த்து முதலிடம் பிடித்துள்ளது.
அக்கட்சிக்கு இதுவரை 9 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த கிரிப்டோ பில்லியனர் கிறிஸ்டோபர் ஹார்போர்னிடமிருந்து 3 மில்லியன் பவுண்டுகளும், ஹாங்காங்கைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி அதிபர் பென் டெலோவிடமிருந்து 4 மில்லியன் பவுண்டுகளும் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
கன்சர்வேடிவ் கட்சி 6 மில்லியன் பவுண்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், லேபர் கட்சி 4 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாம் இடத்திலும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி 2.9 மில்லியன் பவுண்டுகளுடன் நான்காவது இடத்திலும் காணப்படுகின்றன.
அதேநேரம் பசுமைக் கட்சி சுமார் 300,000 பவுண்டுகளை பெற்றுள்ளது.





