ஐரோப்பா

சவுத்தாம்ப்டனில் பொது அமைதி சீர்குலைவு : இருவர் மீது சட்ட நடவடிக்கை!

இறக்கும் தருவாயில் கைவிலங்கிடப்பட்ட ஹென்றி நோவாக்கின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சவுத்தாம்ப்டனில் (Southampton) பொது அமைதி சீர்குலைந்தது.

குறித்த பகுதியில் கலவரம் வெடித்த நிலையில் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை, கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதம் வைத்திருந்தல், பொலிஸாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

50 வயதான மாட் ஸ்டைலர் (Matt Styler) மற்றும் 44 வயதான டேனியல் ஃப்ராஸ்ட் (Daniel Frost) மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேற்படி இருவரும் இன்று சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!