நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு குவைத் உத்தரவு!
ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளிவிவகார அமைச்சு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஈரானின் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த அதிகாரிகள் ‘ஏற்றுக்கொள்ளத்தகாத நபர்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குவைத் அரசு மிகக் கடுமையான காலக்கெடுவை விதித்துள்ளது.
குவைத் சர்வதேச விமானநிலையம்மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஈரானிய தூதரக அதிகாரி நேரில் வரவழைக்கப்பட்டு, குவைத்தின் அதிகாரப்பூர்வ கண்டனம் பதிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.





