ரஷ்யாவில் தலைத்தூக்கியுள்ள பட்ஜெட் பிரச்சினை!! போர் செலவீனத்தை முடக்க அறிவுரை!
உக்ரைனில் நேற்று இரவு ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்கள் பலர் குண்டுவெடிப்புத் தடுப்பு முகாம்களிலும், நிலத்தடி மெட்ரோ நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கீவ் நகரில் பெரிய வெடிப்புகளும், புகை மண்டலங்களும் ஏற்பட்டதாகவும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்தார்.
இதற்கிடையே போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான நிதி ஆதாரம் ரஷ்யாவின் வசம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நிதி அமைச்சகம் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள், தற்போதைய திட்டமிடப்பட்ட பாதுகாப்புச் செலவினங்களின் அளவு, வரவு-செலவு பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
போரின் செலவுகள் கடுமையாக இருப்பதால், இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட சுமார் 40 பில்லியன் டொலர் மதிப்பிலான போர் அல்லாத செலவினங்களை முடக்குமாறு புட்டினுக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.




