புலம்பெயர்தோரை நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டனுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!
பிரித்தானியாவிற்கு புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரிட்டன் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறும் ருவாண்டா அரசாங்கம் 100 மில்லியன் பவுண்டுகளை நஷ்ட ஈடாக கோரி ஹேக்கில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
வழக்கினை கடந்த மூன்று நாட்களாக விசாரித்த நீதிபதிகள் தோல்வியடைந்த இந்த திட்டத்திற்கு பிரித்தானியா பணம் செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளனர்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே ருவாண்டா திட்டம் கைவிடப்பட்டதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்திருந்தார்.
இருப்பினும் உத்தியோகப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





