சிவனொளிபாத யாத்திரைக் காலம் நிறைவு
சிவனொளிபாத யாத்திரைக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக ஸ்ரீபாத விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாத உடமலுவவில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளான 31 ஆம் திகதி, ஸ்ரீபாத உட மலுவவில் நடைபெறும் சமயக்கிரியைகளைத் தொடர்ந்து, மேல் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை கல்பொத்தாவல பெல்மதுளையில் உள்ள ஸ்ரீபாத ராஜமகா விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை அங்கு வந்தடைந்தவுடன், அடுத்த யாத்திரைக் காலம் ஆரம்பமாகும்





