இந்தியா செய்தி

புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு 

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நுரையீரல் நிபுணர் மருத்துவர் நரசிம்மன் தெரிவித்ததாவது,
“உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31 ம் திகதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இளைஞர்களை புகையிலை மற்றும் நிக்கோட்டின் பழக்கத்திலிருந்து பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகையிலை நேரடியாக உட்கொள்வது மூலமாகவும், 16 இலட்சம் பேர் மறைமுகமாகவும் உயிரிழக்கின்றனர்.

தற்போது பெரியவர்கள் மத்தியில் புகை பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வேப்பிங் (இ-சிகரெட்) கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புகையிலையை உட்கொள்வதை விட இது பாதுகாப்பானது என்ற தவறான எண்ணம் உள்ளது. புகையிலையை புகைப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் இந்த வேப்பிங் மூலமாகவும் வரும்.

இது இளைஞர்களின் மூளை வளர்ச்சியையும், மனநலத்தையும் பாதிக்கிறது. மேலும் மற்ற போதைப்பழக்கத்துக்கு தொடக்க புள்ளியாகவும் அமைந்துவிடுகிறது.

நீண்ட காலமாக புகைப்பிடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் தான் உயிரிழக்கின்றனர். புகைப்பிடித்தல் என்பது நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், காச நோய் மற்றும் பல்வேறு சுவாச நோய்களுக்கு நேரடி காரண மாக உள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இளைஞர்களை ஆரம்ப கட்டத்திலேயே புகைப்பழக்கத்தில் இருந்து தடுத்துவிட்டால், அவர்களுடைய எதிர்காலம் புகையில்லா எதிர்காலமாக, ஆரோக்கியமானதாக இருக்கும்.

பெற்றோரும் ஆசிரியர்களும் புகையிலை இல்லாத முன்னுதாரணங்களாக இருப்பது மிகவும் அவசியம்” என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!