ஐரோப்பா

உக்ரைன் போரில் தலிபான்கள் களமிறக்கப்படுவார்களா? ரஷ்யாவின் புதிய வியூகம்!

தலிபான்களுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் ரஷ்யா ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது..

இதன்மூலம் தலிபானுடனான உறவுகளை ஆழப்படுத்துவதோடு, ஆப்கானிஸ்தானில் உள்ள அதன் ஆட்சியை அங்கீகரித்த உலகின் ஒரே நாடு என்ற தனது தனித்துவமான அந்தஸ்தையும் நிலைநிறுத்தியுள்ளது.

சர்வதேச பாதுகாப்பு மன்றம்” என்றழைக்கப்பட்ட நிகழ்வொன்றில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2025-ல் தலிபான் குழுவை அதிகாரப்பூர்வ அரசாங்கமாக ரஷ்யா அங்கீகரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வருகின்றன.

ரஷ்யாவோ அல்லது ஆப்கானிஸ்தான் தரப்போ இராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

இருப்பினும்  உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சியில் சேர தலிபான்கள் தங்கள் அனுபவம் வாய்ந்த போராளிகளை வழங்கத் தொடங்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!