போர் நிறுத்தத்திலும் லெபனானில் 15 குழந்தைகள் உயிரிழப்பு – யுனிசெஃப் அதிர்ச்சி
லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 62 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதல்களே இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ பிரஸ் இதுகுறித்து தகவல் வெளியிட்டார். “கடந்த ஏழு நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினமும் சராசரியாக 11 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்,” என்றார்.
மேலும், “நேற்று மட்டும் ஏழு குழந்தைகள் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். மோதல்களின் போது குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதியாகும்,” என்றும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களை “அதிர்ச்சியூட்டும் நிலை” என யுனிசெஃப் வர்ணித்துள்ளது.





