லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott!
ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி தற்போது சந்தித்து வரும் பாரிய அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, முன்னாள் பிரதமர் டோனி அபோட் Tony Abbott அக்கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், வரும் தேர்தலில் அங்கஸ் டெய்லர் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே தனது முக்கிய நோக்கம் என Tony Abbott அறிவித்துள்ளார்.
சமீபத்திய தேர்தல் தோல்விகளால் பலவீனமடைந்துள்ள லிபரல் கட்சி, தற்போது தீவிர வலதுசாரி கொள்கைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதை Abbott டின் நியமனம் உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக, குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் மூலம் இழந்த செல்வாக்கை மீட்கவும், மற்ற சிறு கட்சிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் அக்கட்சி திட்டமிடுகிறது.
இந்த புதிய தலைமை மாற்றம், கட்சியில் நிலவும் உள்ளக பூசல்களை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.





