அமுலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய 8 பேர் கைது!
கேரளாவில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் பயணித்த வாகனம்மீது தாக்குதல் நடத்தினர் எனக் கூறப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 300 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமுலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதனால் கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ,அமுலாக்கத் துறை அதிகாரிகள் வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.





