சீனாவில் லொறியொன்றுடன் மோதிய பேருந்து – 13 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் சிறிய ரக பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் 09 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், விபத்து நடந்தபோது 16 பேர் இருந்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அதிகாரிகள் பணிக்குழுவொன்றை நியமித்துள்ளனர்.
மேலும் மோசமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதல் காரணமாக அதிகளவிலான உயிரழப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




