சுவிஸில் கத்திக் குத்து தாக்குதல்! காணொளி இணைப்பு!
சுவிட்சர்லாந்தில் உள்ள வின்டர்தூர் ரயில் நிலையமொன்றில் இன்று கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் 28, 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது சுவிஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரி “அல்லாஹு அக்பர்” என்று கத்துவதுபோன்ற காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





