அறிவியல் & தொழில்நுட்பம்

சந்திரனில் மனிதர்களை தரையிறக்க நாசா முயற்சி !! போட்டிக்கு வந்த சீனா!

சந்திரனில் தளம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும், அதற்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகனங்களையும் நாசா சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது.

இந்தத் திட்டங்களில்  ரோபோ தரையிறங்கி, ட்ரோன்கள் மற்றும்  பிற வாகனங்கள் அடங்கியுள்ளன.

2029 இல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் திட்டமாகும்.

மேலும், 2032-க்குள் சந்திரனின் தென் துருவத்தில் 20 பில்லியன் டொலர் செலவில் அணுசக்தி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும்  தளமொன்றை  அமைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இந்த அமெரிக்கத் திட்டம் யதார்த்தமற்றது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2030-ல் சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்குவதற்கான சீனாவின் திட்டமும் அமெரிக்காவிற்கு ஒரு சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!