சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை : தவிடுபொடியாகும் வல்லரசு கனவு!
சீனாவில் தற்போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் பணியகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த மைல்கல்லை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள்தொகை சரிவை மாற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவின் ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகையில், குறைந்தது 15.87 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதேநேரம் 0 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 15.25 சதவீதத்தினராக உள்ளனர்.
இதன்படி மொத்த மக்கள் தொகையில் சுமார் 321.22 மில்லியன் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இது மொத்த மக்கள் தொகையில் 22.86 சதவீதமாகும்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி இளம் தலைமுறையினர் கையிலேயே இருக்கிறது. சீனாவின் சனத்தொகையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாரிய மாற்றம் அதன் வல்லரசு கனவை தவிடுப்பொடியாக்கிவிடும் என அஞ்சப்படுகிறது.




