செய்தி பொழுதுபோக்கு

திரைப்படத் துறையினரின் கோரிக்கை ஏற்பு: முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு!

புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், மற்றும் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை கடந்த மே 16 ஆம் திகதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமையவே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!