அரசியல் இலங்கை செய்தி

முதுகெலும்பிருந்தால் வடக்கில் தேர்தலை நடத்தவும்: மஹிந்த அணி சவால்!

“தேர்தலை எந்தகாலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜே.வி.பியின் செயலாளருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ மாகாணசபைத் தேர்தல் நடக்காது என ஜே.வி.பியின் செயலாளர் கூறியுள்ளார். தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இது விடயத்தில் ஜே.வி.பி. செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்ன?

நாட்டில் பொருட்கள், சேவைகள் விலைகள் அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், மக்கள்மீது மென்மேலும் சுமைகள் திணிக்கப்படுகின்றன.

வரிவிதிப்பு, கட்டண அதிகரிப்பு என்பவதான் நெருக்கடியை தீர்ப்பதற்கான வழியா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
எதிரணிகள் இல்லையெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் தேர்தலை நடத்திக்காட்டட்டும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

அதேவேளை, மேல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சமெனில் வடக்கு மாகாணசபைத் தேர்தலையாவது நடத்தி காட்டுமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றேன். முதுகெலும்பிருந்தால் இதனை செய்யட்டும்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!