ஐரோப்பா

ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதல் : இரகசிய கூட்டுப் பயிற்சியில் நேட்டோ நாடுகள்!

நேட்டோவின் இங்கிலாந்து தலைமையிலான கூட்டு விரைவு எதிர்வினைப் படை (ARRC), நேசப் படைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த பயிற்சிக்காக பயன்பாட்டில் இல்லாத சேரிங் கிராஸ் சுரங்கப்பாதை தளம் இரகசிய முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சிற்கு ‘ஆபரேஷன் ஆர்கேட் ஸ்ட்ரைக்’  (Operation Arcade Strike ) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன்போது  ரஷ்யாவிற்கு எதிராக ‘ஆழ்கடல் தாக்குதல்’ நடவடிக்கைகளை உருவகப்படுத்தும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் ரஷ்யத் தகவல் தொடர்புகளை முடக்குவதற்கும், ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கும் நேட்டோவின் மின்னணுப் போர் திறன்களை பயன்படுத்துவது தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரித்தானியா,   அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இராணுவப் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நேட்டோவின் தரைப்படை தலைவர் கிறிஸ்டோபர் டோனாஹூ (Christopher Donahue) , 2030-க்குள் பணிக்குத் தயாராக இருப்பது என்பது ஒரு முழக்கம் அல்ல, அது நாம் செய்ய வேண்டியது” என்று கூறியுள்ளார்.

அத்துடன் சாத்தியமான ரஷ்யத் தாக்குதலுக்குத் தயாராவதற்கு நேட்டோ கூட்டணிக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!