காசா விடயத்தில் பிரிட்டன் இரட்டை வேடம்!
காசா விவகாரத்தில் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் Yvette Cooper இரட்டை வேடம் போடுகின்றார் என்று சர்வதேச சட்ட நிபுணரும், மனித உரிமை சட்டத்தரணியுமான Tayab Ali விமர்சித்துள்ளார்.
காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என Yvette Cooper கவலை வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்று ஒருபுறம் பேசிக்கொண்டு, மறுபுறம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை பிரிட்டன் வழங்கிவருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பிரிட்டன் அரசு தண்டனையிலிருந்து பாதுகாக்கின்றது எனவும் சட்டத்தரணி Tayab Ali குற்றஞ்சாட்டியுள்ளார்.




