மண்கவ்வினாலும் முதலிடத்தை தக்கவைத்தது RCB!
IPL 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் Hyderabad அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
RCB அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது ஹைதராபாத்.
அணியின் ஆரம்ப வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசி அதிரடி தொடக்கம் தந்தார்.
தொடர்ந்து மிரட்டிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசன் 24 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களும் குவித்து அசத்தினர்.
256 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் விரட்டிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் RCB அணி தோல்வியடைந்த போதிலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கான தகுதி இலக்கான 166 ரன்களைக் கடந்ததால், நிகர ரன் ரேட் அடிப்படையில் அதிகாரபூர்வமாக முதலிடத்தை உறுதி செய்து குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடிக்க, ஹைதராபாத் அணி இந்தப் பெரிய வெற்றியைப் பெற்றும் ரன் ரேட் பற்றாக்குறையால் நூலிழையில் முதல் இரண்டு இடங்களைத் தவறிவிட்டு 3-வது இடத்துடன் play-off சுற்றுக்கு முன்னேறியுள்ளது.




