பிரித்தானியாவில் கடும் வெப்பம்! இறப்புகள் ஏற்படலாம்!!
பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று முதல் வரும் 27 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.
மெட் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, லண்டன், தென்கிழக்கு, கிழக்கு மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளும், இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
லண்டனில் வெப்பநிலை 30°C வரை உயரும் என்றும், ஞாயிற்றுக்கிழமை தெற்கு இங்கிலாந்தில் 33°C-ஐத் தாண்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது 1922-ல் பதிவான மே மாத வெப்பநிலையான 32.8°C-ஐ மிஞ்சக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார மற்றும் சமூக சேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் எனவும், இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.




