மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!!! பெற்றோரின் கவனத்திற்கு!
இலங்கையில் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் பரவி வருவதாக தலைமை நோய்ப்பரவலியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது தொடர்பில் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலில் தெனியாயாவில் பதிவான இந்த மூளைக்காய்ச்சல் பரவல் தற்போது பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதன்படி, தியதலாவாவில் 28 நோயாளிகளும், வெலிமடவில் 13 நோயாளிகளும், ரிக்கிளகஸ்கடியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக நோய்ப்பரவலியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் முறையான விசாரணையையும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய் அதிகமாகப் பரவியுள்ளதாக கூறிய அவர், இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை தென்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





