ஐரோப்பா

அணுவாயுதம் எப்போது பயன்படுத்தப்படும் : ரஷ்ய ஜனாதிபதி விளக்கம்!

ரஷ்யா போரில் அணுவாயுதங்களை பயன்படுத்தும் என நீண்டகாலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடைசி முயற்சியாகவே அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

64,000 துருப்புகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகளை உள்ளடக்கிய, பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அணுசக்திப் பயிற்சியை ரஷ்யாவும், பெலாரஸும் நிறைவு செய்துள்ளன.

நேட்டோவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இவ்விரு நாடுகளும் முன்னெடுத்துள்ள இந்த பயிற்சியை ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன.

நேட்டோ மீதான எந்தவொரு தாக்குதலும் “பேரழிவை ஏற்படுத்தும்” பதிலடி நடவடிக்கைக்கு வித்திடும் என்று நேட்டோ கூட்டணியின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே புட்டின் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். மொஸ்கோவின் அணு ஆயுதக் களஞ்சியம் “இறையாண்மைக்கு” ஒரு உத்தரவாதமாகச் செயல்படுவதாகவும் அவ் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அணுசக்திப் பயிற்சிகள் பொதுவாக போலிப் போர்க்குண்டுகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!