ஐரோப்பா செய்தி

பிரித்தானியா ஆறு வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்

பிரித்தானியா ஆறு வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

பஹ்ரைன், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளுடனேயே பிரித்தானியா இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வந்தால், பிரித்தானிய பொருளாதாரத்திற்கு சுமார் £3.7 பில்லியன் மதிப்பிலான பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஆண்டுதோறும் சுமார் £580 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சுங்க வரிகள் நீக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளில் பிரித்தானிய நிறுவனங்கள் விரிவடைவதற்கும் கூட்டாண்மைகள் உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்றும், அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரதமர் Starmer தலைமையிலான அரசாங்கம் இந்தியா மற்றும் தென் கொரியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்குப் பின்னர் மேற்கொண்ட மூன்றாவது முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.

மேலும், ஜி7 நாடொன்றும் GCC உறுப்பு நாடுளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!