அரசியல் இலங்கை செய்தி

பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: அவசர தேர்தலை கோரும் எதிரணி!

“மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்காக மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாட்டை ஆள்வதற்கு முடியவில்லை. எனவே, மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை நடத்துவதற்குரிய ஜனநாயக பரீட்சை நடத்தப்பட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ளது. எனவே, அத்தேர்தலை நடத்த வேண்டும்.

அவ்வாறு அல்லாவிட்டால் இன்னும் சில மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும்.

ஜனநாயக வழியிலேயே நாம் மக்கள் கருத்தை அறிவதற்கு விரும்புகின்றோம். ஆகவே, அரசாங்கம் ஜனநாயகத்தை மதித்து செயல்பட வேண்டும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!