லண்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீவிபத்து – 07 பேர் வைத்தியசாலையில்!
லண்டனில் A5 சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஃபால்கிர்க் ஹவுஸில் (Falkirk House) தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த தீவிபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் கட்டிடத்தின் 05 ஆவது மாடியில் தீவிபத்து கண்டறியப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர் விபத்தால் காயமடைந்த 07 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அதேநேரம் மேலும் 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை (LFB) தெரிவித்துள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




