இலங்கை செய்தி

பிரதமர் லண்டனை சென்றடைந்தார்

இலங்கை பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயமாக லண்டனை சென்றடைந்துள்ளார்.

அவர் நேற்று பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் (Richard Wildash) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பிரதமரை வரவேற்றனர்.

43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை கல்வி, அபிவிருத்திக் கற்கை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!