அரசியல் இலங்கை செய்தி

“தமிழ் டயஸ்போராக்களுக்காகவே மஹிந்த குறிவைப்பு” – குமுறுகிறார் தேரர்!

போரை முடிவுக்குகொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச விடயத்தில், தமிழ் டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே அரசாங்கம் செயல்படுகின்றது என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவை சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

” தீவிரவாதத்துக்கு முடிவு கட்டி இந்நாட்டுக்காக மஹிந்த ராஜபக்ச ஆற்றிய சேவை என்னவென்பது மக்களுக்கு தெரியும்.

எனினும், மஹிந்த விடயத்தில் டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே தற்போதைய அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது.

மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் அரசியல்வாதிகளுக்கு வடக்கு, கிழக்குக்கு சென்றுகூட சுதந்திரமாக அரசியல் செய்ய முடிகின்றது.

அதேவேளை, பயங்கரவாத குழுக்களை (புலிகளை) நினைவுகூருவதை ஏற்கமுடியாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.

இந்திய முதல் அமைச்சர் விஜய், கச்சத்தீவை பெறுவதைற்கே முயற்சிக்கின்றார். இது விடயத்தில் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.’ – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!