உலகம்

காங்கோவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!

காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கிருக்கும் அமெரிக்கர்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைக்கு  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஆதரவளித்து வருகிறன.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள பல அமெரிக்கர்கள், சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் .

அவர்களில் சிலர் அதிக ஆபத்துள்ளவர்களாகக் கருதப்படுவதுடன்,  குறைந்தபட்சம் ஒருவருக்காவது  அறிகுறிகள் தென்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர்களைத் தனிமைப்படுத்தலுக்கும் சிகிச்சைக்கும் காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து மாற்றுவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கோ குடியரசில் எபோலா நோய் தொற்று காரணமாக 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இதனை பொது சுகாதார அவசரநிலையாக WHO அறிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!